முதல் விற்பனையில் ஆறு லட்சம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்து சியோமி அசத்தல்

சியோமி நிறுவனம் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்த ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் முதல் ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் 12.00 துவங்கியது. வழக்கம் போல் சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் விற்பனையில் மட்டும் சியோமி நிறுவனம் சுமார் ஆறு லட்சம் யூனிட்களை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது.

எனினும், முதல் நாள் விற்பனை என்பதால் மதியம் 03.00 மணிக்கு இரண்டாவது விற்பனையை சியோமி நடத்தியது. இந்த விற்பனையும் வெகு விரைவில் நிறைவுற்றது. இரண்டு ஃபிளாஷ் விற்பனை கடந்தும் சில யூனிட்கள் மீதம் இருப்பதால் சியோமி மேலும் இரண்டு ஃபிளாஷ் விற்பனையை இன்றே நடத்த முடிவு செய்து மூன்றாவது விற்பனை மாலை 06.00 மணிக்கும், நான்காவது விற்பனையை இரவு 09.00 மணிக்கு நடத்துகிறது.

புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் mi.com மற்றும் பிளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் பிளாக் ஃபிரைடே சிறப்பு விற்பனையின் கீழ் புதிய ஸ்மார்ட்போன் தள்ளுபடி செய்யப்பட்ட விலையிலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு ரூ.500 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ மாடலில் 6.28 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், நாட்ச், 19:9 ரக டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி மற்றும் டூயல் செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு கேமரா யூனிட்களிலும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சியோமி இந்தியாவின் நான்கு கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அமைந்துள்ளது. அதன்படி 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா செட்டப், புகைப்படங்களை அழகாக்கும் விசேஷ ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. + 2 எம்.பி. டூயல் செல்ஃபி கேமரா சென்சார், 1.8μm பிக்சல் சென்சார் கொண்டிருக்கிறது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

 • 6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
 • 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
 • அட்ரினோ 509 GPU
 • 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
 • 64 ஜி.பி. மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
 • ஹைப்ரிட் டூயல் சிம்
 • 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS
 • 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
 • 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0, 1.8μm
 • 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
 • கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
 • 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.