நவம்பரில் ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் நோட் 5 ப்ரோ மாடலின் மேம்படுத்தப்பட்ட நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் நவம்பர் 22ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை நவம்பர் 23ம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது.

ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, டூயல் செல்ஃபி கேமரா சென்சார், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் கொண்டிருக்கிறது. முன்னதாக புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனின் அழைப்பிதழ்களை சியோமி வெளியிட்டிருந்தது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

  • 6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  • 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
  • அட்ரினோ 509 GPU
  • 4 ஜி.பி. ரேம்
  • 64 ஜி.பி. மெமரி
  • மெமரியை நீட்டிக்கும் வசதி
  • ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
  • ஹைப்ரிட் டூயல் சிம்
  • 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல்,
  • 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
  • 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0
  • 2 எ.ம்பி. இரண்டாவது செல்ஃபி கேமரா
  • கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  • 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் துவக்க விலை ரூ.14,999 நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.