இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டது

சியோமி நிறுவனம் தனது சாதனங்களுக்கு பண்டிகை காலத்தில் அறிவித்த சிறப்பு விலை குறைப்பினை, சில சாதனங்களுக்கு மட்டும் நிரந்தரமாக வழங்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் சியோமி Mi ஏ2, ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுகிறது. இந்தியாவில் தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருப்பதை கொண்டாடும் வகையில் விலையை குறைப்பத்து இருப்பதாக சியோமி அறிவித்துள்ளது.

நிரந்தர விலைகுறைப்பு பெற்றுள்ள சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள்

  • சியோமி Mi ஏ2 (4ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
  • சியோமி Mi ஏ2 (6ஜி.பி. + 128 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
  • சியோமி ரெட்மி வை2 (4ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
  • சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ (4ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
  • சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ (6ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய விலை குறைப்பு இந்தியாவில் ஏற்கனவே அமலாகி விட்டது. முன்னதாக சியோமி நிறுவனம் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதை காரணம் காட்டி தனது ரெட்மி 6, ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள், 10,000 எம்.ஏ.ஹெச். Mi பவர்பேங்க் மற்றும் Mi டி.வி. 32 இன்ச் ப்ரோ மற்றும் 49 இன்ச் ப்ரோ மாடல்களின் விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவம்பர் 22ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.