ஷார்ப் அக்வோஸ் ஆர்2 காம்பேக்ட் டூயல் நாட்ச் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஷார்ப் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் டூயல் நாட்ச் வடிவமைப்புடன் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா டிஸ்ப்ளேவின் மேல் புறமும், கைரேகை சென்சார் டிஸ்பளேவின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் முக அங்கீகார (Face Recognition) வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை 5.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி. IGZO LCD டிஸ்ப்ளே மற்றும் 64எம்.எம். அகலம் கொண்ட காம்பேக்ட் பாடி வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதனால் கைகளில் கச்சிதமாக பயன்படுத்த முடியும்.

ஷார்ப் அக்வோஸ் ஆர்2 காம்பேக்ட் சிறப்பம்சங்கள்:

 • 5.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2280×1080 பிக்சல் 19:9 IGZO LCD 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
 • 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10nm பிராசஸர்
 • அட்ரினோ 630 GPU
 • 4 ஜி.பி. ரேம்
 • 64 ஜி.பி. மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆன்ட்ராய்டு 9.0 (பை)
 • 22.6 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, OIS
 • 8 எம்.பி. செல்ஃபி கேமரா
 • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்
 • கைரேகை சென்சார்
 • 4ஜி எல்.டி.இ., வைபை, MIMO, ப்ளூடூத் 5.0, ஜி.பி.எஸ், யு.எஸ்.பி. டைப்-சி
 • 2,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
 • ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய ஷார்ப் அக்வோஸ் ஆர்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் ஸ்மோக் கிரீன், டீப் வைட் மற்றும் பியூர் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 2019 வாக்கில் ஜப்பானில் துவங்கும் என்றும் இதன் விலை பின்னர் அறிவிக்கப்படுகிறது.