வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 விவரங்கள்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் லைவ் படங்கள் ஏற்கனவே லீக் ஆகியிருந்ததைத் தொடர்ந்து முதல் முறையாக ஜி7 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் வெளியாகி இருக்கிறது.

இம்முறை லீக் ஆகியிருக்கும் விவரங்களில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் XT-1965 என்ற மாடல் நம்பருடன் அமெரிக்காவின் FCC மூலம் சான்று பெற்றிருக்கிறது.

அந்த வகையில் புது ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. மோட்டோ ஜி6 போன்றே, மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனிலும் கிளாஸ் பேக் வழங்கப்படுகிறது.

இத்துடன் ஸ்மார்ட்போனின் டூயல் கேமரா சென்சார்களின் கீழ் காணப்படும் மோட்டோரோலா லோகோவிலேயே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் கொண்டிருக்கும் மோட்டோ ஜி7 மாடலின் கீழ் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது.

மோட்டோ ஜி7 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

 • 6.0 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
 • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்
 • அட்ரினோ 512 GPU
 • 4 ஜி.பி. ரேம்
 • 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • டூயல் சிம் வசதி
 • ஆன்ட்ராய்டு 9.0 பை
 • 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
 • 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
 • 12 எம்.பி. செல்ஃபி கேமரா
 • கைரேகை சென்சார்
 • 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப்-சி
 • 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பிளாக், ரெட் மற்றும் சில்வர் என மூன்று வெவ்வேறு நிறங்களில் வெளியாகலாம் என்றும் புது ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் அல்லது ஜனவரி மாத வாக்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Courtesy: mr gizmo