இன்ஸ்டாகிராமில் ஷாப்பிங் செய்ய மூன்று அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்ய மூன்று புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் அம்சம் வழங்கப்பட்டது.

இன்ஸ்டா ஸ்டோரிக்களில் பொருட்களின் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்து ஷாப்பிங் வசதி இன்ஸ்டாவாசிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பின் எக்ஸ்ப்ளோர் (Explore) பகுதியின் மூலம் ஷாப்பிங் சேனலை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் அந்நிறுவனம் புதிய பொருட்களை கண்டறிய மூன்று வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.

அதன்படி பயனர்கள் புதிய பொருட்களை கண்டறிவதுடன், பிரான்டுகளிடம் இருந்து பொருட்களை வாங்குவது மற்றும் இன்ஸ்டாகிராம் ஷாப்பிங் முழு விவரங்களையும் பார்க்க புதிய அம்சம் வழி செய்கிறது.

இன்ஸ்டாகிராமில் நீங்கள் கடந்த வரும் போஸ்ட்களில் ஏதேனும் பொருள் உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் அதனை ஷாப்பிங் பட்டியலில் சேமித்து வைத்துக் கொண்டு பின்னர் அதனை பார்க்க முடியும். ஸ்டோரி அல்லது ஃபீட்களில் பொருட்களை கிளிக் செய்து வலது புறம் காணப்படும் சேவ் செய்துக் கொள்ளும் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் விரும்பும் பொருளை ஷாப்பிங் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஷாப்பிங் பட்டியல் ஆப்ஷனை உங்களது ப்ரோஃபைல் பகுதிக்குச் சென்று இயக்க முடியும். புதிய வசதியுடன் இன்ஸ்டாகிராம் செயலியின் பிஸ்னஸ் ப்ரோஃபைல்களில் உள்ள ஷாப் டேப் ஆப்ஷனை புதுப்பிக்க இருப்பதாகவும், இதற்கான சோதனை நடைபெற்று கொண்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஷாப்பிங் சார்ந்த போஸ்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் பொருட்களை வேகமாக, எளிதில் பார்க்கக்கூடிய வகையில் ஷாப் டேப் மாற்றப்பட இருக்கிறது. பிஸ்னஸ் ப்ரோஃபைல் செல்லும் போது, பொருட்களை பார்க்க ஷாப் பட்டனை கிளிக் செய்யும் போது குறிப்பிட்ட பொருளின் பெயர், விலை மற்றும் போஸ்ட் விவரங்களை பார்க்க முடியும்.

நீங்கள் விரும்பும் பிரான்டுகளின் பொருட்களை வீடியோக்கள் மூலமாகவும் ஷாப் செய்ய முடியும். நீங்கள் விரும்பும் பிரான்டு வீடியோவினை ஃபீடில் பார்க்கும் போது, இடது புறமாக காணப்படும் ஷாப்பிங் ஐகானை கிளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.