வாட்ஸ்அப்பில் கான்டாக்ட் ஷேர் செய்ய புது வசதி

வாட்ஸ்ப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து செயலியில் கான்டாக்ட் ஷேர் செய்ய புது வசதி சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் விரைவில் பயனர்கள் தங்களது கான்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். கோடு (QR Code) மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் நேம்டேக் (Nametag) அம்சம் போன்றே இயங்கும் என தெரிகிறது. மேலும் செயலியில் இருந்து நேரடியாக கான்டாக்ட் சேர்க்கும் அம்சத்தினை வழங்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஷேர் கான்டாக்ட் இன்ஃபோ வியா கியூ.ஆர். (share contact info via QR) அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது கான்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் நேடம்டேக் அல்லது ஸ்னாப்சாட் செயலியில் ஸ்னாப்கோட் இயங்குவதை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். பதிப்பில் சோதனை செய்யப்படுவதாகவும், விரைவில் ஆன்ட்ராய்டு தளத்தில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் வியாபார ரீதியாக வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

புதிய அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நியூ கான்டாக்ட் (New Contact) ஷார்ட்கட் அம்சத்திற்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் நியூ கான்டாக்ட் அம்சம் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் மே மாதம் வழங்கப்பட்டது.