விரைவில் இந்தியா வரும் நான்கு கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் நான்கு கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை நவம்பர் 20ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. நான்கு கேமரா கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படகிறது.

இந்தியாவில் புது கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் விலை ரூ.40,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதே விழாவில் கேலக்ஸி ஏ9 (2018) இந்திய வெளியீடு குறித்து அறிவித்திருந்தது.

புது கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) சிறப்பம்சங்கள்:

  • 6.3 இன்ச் 1080×2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
  • ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
  • அட்ரினோ 616 GPU
  • 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
  • 128 ஜி.பி. மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7 aperture
  • 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
  • 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா
  • 5 எம்.பி டெப்த் கேமரா
  • 24 எம்.பி. செல்ஃபி கேமரா f/2.0
  • கைரேகை சென்சார்
  • 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  • 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  • அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்