போர்டிரானிக்ஸ் மஃப்ஸ் ஆர் ப்ளூடூத் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

போர்டிரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதுய மஃப்ஸ் ஆர் ப்ளூடூத் ஹெட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ப்ளூடூத் ஹெட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் மஃப்ஸ் சீரிஸ் வகைகளில் புதிய மாடலாக அறிமுகமாகி இருக்கிறது.

புதிய மஃப்ஸ் ஆர் ஹெட்போனின் எடை குறைவாக இருப்பதோடு, அளவில் சிறியதாகவும் பயன்படுத்த சவுகரியமாக இருக்கும் என போர்டிரானிக்ஸ் தெரிவித்துள்ளது. இதன் மெல்லிய மற்றும் எடை குறைவான வடிவமைப்பு காரணமாக இதனை நீண்ட நேரம் தொடர்ந்து உபயோகிக்க முடியும்.

சமீபத்திய கையடக்க மின்சாதனங்களில் பிரபலம் மற்றும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மஃப்ஸ் ஆர் ஹெட்போனில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிறிது நேரம் சார்ஜ் செய்து நாள் முழுக்க பயன்படுத்த முடியும். மஃப்ஸ் ஆர் ஹெட்போன்களில் நெக்பேன்ட் வடிவமைப்பு மற்றும் நேர்த்தியான இயர்டிப்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஹெட்போன்களை பயன்படுத்தி, பயனர்கள் இசையை கேட்டு ரசிப்பதுடன், அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். இத்துடன் 3.5எம்.எம். ஆக்சில்லரி கேபிள் கொண்டு பில்ட்-இன் மைக் மற்றும் அழைப்புகள், பிளேபேக் உள்ளிட்டவற்றை இயக்க முடியும். ப்ளூடூத் வசதி கொண்ட இயர்போன்களில் 40 எம்.எம். இன்பில்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டு இருப்பதால், அதிகபட்சம் 10 மீட்டர் வரை ஆடியோவை கன்ட்ரோல் செய்ய முடியும்.

புது இயர்போன்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 10 முதல் 15 மணி நேர டாக்டைம் மற்றும் தொடர்ச்சியாக 15 மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக் வழங்கும் என போர்டிரானிக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் போர்டிரானிக்ஸ் புதிய மஃப்ஸ் ஆர் ப்ளூடூத் ஹெட்போனின் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.