இந்தியாவில் சியோமி சாதனங்கள் விலை உயர்வு

சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது பொருட்களின் விலையை மாற்றியமைத்துள்ளது. புதிய விலை மாற்றத்திற்கான அறிவிப்பை சியோமி நிறுவன இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

புதிய மாற்றத்தைத் தொடர்ந்து சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, Mi டி.வி.4 55-இன்ச் 4K டி.வி., ரெட்மி 6, ரெட்மி 6ஏ, 10,000 எம்.ஏ.ஹெச். Mi பவர்பேங்க் 2i, Mi டி.வி. 32 இன்ச் ப்ரோ மற்றும் 49 இன்ச் ப்ரோ மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சியோமி சாதனங்களின் விலை உயர்வுக்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிவு தான் காரணம் என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோமி நிறுவனம் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் மற்றும் Mi எல்.இ.டி. டி.வி. 4 ப்ரோ சீரிஸ் விலை இரண்டு மாதங்களுக்கு பின் அதிகரிக்கப்படலாம் என ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சியோமி சாதனங்களின் புதிய விலை பட்டியல்:

– சியோமி ரெட்மி 6ஏ (2 ஜி.பி. + 16 ஜி.பி.) – ரூ. 6599 (முன்பை விட ரூ. 600 அதிகம்)
– சியோமி ரெட்மி 6ஏ (2 ஜி.பி. + 16 32GB) – ரூ. 7499 (முன்பை விட ரூ. 500 அதிகம்)
– சியோமி ரெட்மி 6 (3 ஜி.பி. + 32 ஜி.பி.) – ரூ. 8499 (முன்பை விட ரூ. 500 அதிகம்)
– சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4சி ப்ரோ 32 இன்ச் – ரூ. 15999 (முன்பை விட ரூ. 1000 அதிகம்)
– சியோமி Mi எல்.இ.டி. டி.வி 4ஏ ப்ரோ 49 இன்ச் – ரூ. 31999 (முன்பை விட ரூ. 2000 அதிகம்)
– சியோமி 10000 எம்.ஏ.ஹெச். Mi பவர் பேங்க் 2i பிளாக் – ரூ. 899 (முன்பை விட ரூ. 100 அதிகம்)

சியோமி சாதனங்களின் புதிய விலை ஏற்கனவே அமலாகிவிட்டது.