காளான் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழிமுறையை கண்டறிந்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

அமெரிக்காவில் வரும் ஸ்டீவன்ஸ் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் பசுமை வழியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையை கண்டறிந்துள்ளனர். இந்திய வம்சாவெளி ஆய்வாளர்கள் இடம்பெற்றிருக்கும் குழுவினர் சைனோபாக்டீரியாவை காளான்களில் வைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.

சைனோபாக்டீரியாவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பது பரவலாக அனைவரும் அறிந்திருந்தாலும், இதனை நீண்ட நேரம் அதனை சேகரித்து வைக்க செயற்கை உபகரணங்கள் உதவாது. இதற்கு மாற்றாக காளான்களை உபயோகப்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

சைனோபாக்டீரியாவை காளானுடன் இணைக்கும் போது மின்சாரம் நீண்ட நேரத்திற்கு சேகரித்து வைக்க முடியும். காளானில் உள்ள நியூட்ரியன்ட்கள், மாய்ஸ்ச்சர், பி.ஹெச். மற்றும் டெம்ப்பரேச்சர் உள்ளிட்டவை சைனோபாக்டீரியாவை நீண்ட நேரம் மின்சாரம் உற்பத்தி செய்ய வைக்கும் என ஆராய்ச்சியாளர் குழுவில் இடம்பெற்று இருக்கும் மனூர் மற்றும் சுதீப் ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளர்.

இந்த ஆய்வில் சைனோபாக்டீரியா செல்கள் நீண்ட நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவதாக ஜோஷி மேலும் தெரிவித்தார். முதல் முறையாக ஹைப்ரிட் சிஸ்டம் செயற்கை முறையில் ஒன்றிணைந்து செயல்பட வைக்க முடியும் என நிரூபித்து இருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

முதல்முறை சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் ரோபோடிக் கை மூலம் 3D பிரின்டர் கொண்டு எலெக்டிரானிக் இன்க் அச்சடித்து இருக்கின்றனர். இவ்வாறு அச்சடிக்கப்பட்ட நெட்வொர்க் காளான் குடை மீது மின்சாரத்தை சேகரிக்கும் பணியை செய்கிறது. இதன் மூலம் அடுத்த தலைமுறை ஹைப்ரிட் அப்லிகேஷன்கலுக்கு பல்வேறு வழிமுறைகளை உருவாக்க முடியும்.