ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய மெசேஜ்களை திரும்பப் பெறும் வசதி

உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப்பில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

பயனர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த அம்சம் தற்சமயம் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது. புதிய அம்சங்களுக்கான விவரங்கள் ஐ.ஓ.எஸ். தளத்துக்கான மெசஞ்சர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் ஐ.ஓ.எஸ். 191.0 வெர்ஷனின் குறியீடுகளில் கலர் கிரேடியன்ட்கள், ரீ-ஸ்கின் செய்யப்பட்ட இன்டர்ஃபேஸ் உள்ளிட்டவை வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதியை வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் மெசஞ்சர் செயலியில் குறுந்தகவல்களை அனுப்பிய 10 நிமிடங்களுக்குள் அதனை திரும்பப் பெறவோ அல்லது அழிக்கவோ முடியும். வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க ஏழு நிமிட அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.