டிசம்பர் முதல் பிளே ஸ்டேஷனிலும் பப்ஜி விளையாடலாம்

ஸ்மார்ட்போன்களில் தற்போதைய டிரெண்டிங் கேமாக இருக்கும் பப்ஜி (PUBG) டிசம்பர் மாத வாக்கில் பிளே ஸ்டேஷன் 4லும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோனியின் சர்வெர்களில் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களில் பிளே ஸ்டேஷன் 4க்கான பப்ஜி கேம் டிசம்பர் மாதத்தில் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கேமிங் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரெஸ்ட்இரா எனும் கேமிங் தளம் மற்றும் பி.எஸ்.என்.ப்ரோஃபைல்ஸ் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களில் பி.எஸ்.4 கேமிங் டேட்டாபேசில் பப்ஜி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

பப்ஜி வெளியீட்டுக்கான சரியான நேரம் அறியப்படவில்லை என்றாலும், இது ஏற்கனவே சோனி சர்வெர்களில் இருக்கிறது. பி.எஸ்.என். ஸ்டோரில் பப்ஜி கன்டன்ட் ஐ.டி. மற்றும் கேம் படம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது என பி.எஸ்.என். ப்ரோஃபைல்ஸ் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் கொரிய கேம் ரேட்டிங் மற்றும் நிர்வாக குழு பி.எஸ்.4-க்கான பப்ஜி கேமினை வரிசைப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் எக்ஸ்பாக்ஸ் ஒன் (Xbox One) தளத்தில் பப்ஜி 1.0 வெளியிடப்பட்ட நிலையில் மற்ற தளங்களிலும் பப்ஜி வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.