ஐந்து புதிய சலுகைகளை அறிவித்த ஏர்டெல்

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ஐந்து புதிய சலுகைகளை பல்வேறு பலன்களுடன் அறிவித்துள்ளது. ரூ.178ல் துவங்கி அதிகபட்சம் ரூ.559 வரையிலான விலைகளில் ஏர்டெல் புதிய சலுகைகள் கிடைக்கிறது. இவற்றில் குறைந்தபட்சம் 28 நாட்களில் துவங்கி அதிகபட்சம் 90 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகின்றன. புதிய சலுகைகளின் மூலம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏர்டெல் ரூ.178 பிரீபெயிட் சலுகை

ரூ.178 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையில் பயனர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், அன்லிமிட்டெட் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜி.பி. 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.149 விலையில் கிடைக்கும் மற்றொரு சலுகை தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.229 பிரீபெயிட் சலுகை

இந்த சலுகையில் ரூ.178 விலையில் கிடைக்கும் அதே பலன்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. எனினும் தினசரி டேட்டா அளவு 1.4 ஜி.பி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏர்டெல் சேவையை பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை ரூ.199 விலையில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.344 பிரீபெயிட் சலுகை

இந்த சலுகையிலும் ரூ.178 மற்றும் ரூ.229 சலுகைகளில் வழங்கப்படுவதை போன்ற பலன்களே வழங்கப்படுகிறது. எனினும் இதன் டேட்டா அளவு தினமும் 2 ஜி.பி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். மற்றும் வேலிடிட்டி உள்ளிட்டவற்றில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

ஏர்டெல் ரூ.495 மற்றும் ரூ.559 பிரீபெயிட் சலுகை

இறுதியில் ரூ.495 மற்றும் ரூ.559 சலுகைகளில் வேலிடிட்டி மற்றும் வேறுபடுகிறது. இரண்டு சலுகைகளிலும் 1.4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், அன்லிமிட்டெட் ரோமிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. எனினும் ரூ.495 சலுகையில் 84 நாட்களும், ரூ.559 சலுகையில் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகைகளை புது சிம் வாங்கும் போதோ அல்லது மற்ற நெட்வொர்க்கில் இருந்து போர்ட் செய்யும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இவற்றை பயனர்கள் ஏர்டெல் வலைதளம் அல்லது மைஏர்டெல் ஆப் மூலம் பெற முடியும்.