இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கி ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் சாதனை

ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கியுள்ளனர். சக்தி என அழைக்கப்படும் இந்த மைக்ரோ பிராசசர் கொண்டு கம்ப்யூட்டிங் மற்றும் இதர சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

இந்த மைக்ரோ பிராசசர் குறைந்த திறன் கொண்ட வயர்லெஸ் சிஸ்டம் மற்றும் நெட்வொர்க்கிங் சிஸ்டங்களில் பயன்படுத்த முடியும் இதனால் வெளிநாட்டு மைக்ரோ பிராசசர் களை நாடவேண்டிய அவசியம் இனி ஏற்படாது. இந்த மைக்ரோ பிராசசரில் சர்வதேச தரத்துக்கு இணையாக பயன்படுத்த முடியும்.

சக்தி மைக்ரோ பிராசசர் செமிகண்டக்டர் ஆய்வகம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஜோடிக்கப்பட்ட உள்ளது. அந்த வகையில் முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட முதல் மைக்ரோ பிராசசர் என்ற பெருமையை சக்தி பெற்றுள்ளது என ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.

முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதால் ட்ரோஜன் மற்றும் இதர பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.

சக்தி பிராசஸர்களை மிகமுக்கிய துறைகளான பாதுகாப்பு, அணு ஆயுத கட்டமைப்பு, அரசு அலுவலகம் மற்றும் துறைகளில் பயன்படுத்தும்போது குறிப்பிடத்தக்க பயன்களை பெற முடியும் என எதிர்பார்க்கலாம்.

இந்தத் திட்டம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியால் சாத்தியமாகியுள்ளது.