ரூ.20 லட்சம் விலையில் ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி இந்தியாவில் அறிமுகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஆடம்பர தொலைகாட்சி மாடல்களை விற்பனை செய்து வரும் வு டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

புதிய டிவி மாடல் வு 100-இன்ச் 4K UHD எல்.இ.டி. டிவி என அழைக்கப்படுகிறது.100-இன்ச் அளவு கொண்ட புதிய டிவி ஆன்ட்ராய்டு 4K UHD தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

வு100 டிவி மாடல் ஆன்ட்ராய்டு 8.0 ஒரியோ இயங்குதளம் மற்றும் முழுமையான மெட்டல் வடிவமைப்பு கொண்டுள்ளது. 4K HDR10 பேனல் கொண்டிருக்கும் இந்த டிவியில் 2.5 பில்லியன் கலர் மற்றும் வைடு கலர் கமுட், பில்ட்-இன் ஊஃபர் மற்றும் 2000 வாட் ஜெ.பி.எல். ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

இத்துடன் வு ஆக்டிவாய்ஸ் ரிமோட் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, யூடியூப் மற்றும் கூகுள் பிளே போன்றவற்றுக்கு ஹாட்கீ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர், ஹாட்ஸ்டார், ஆல்ட் பாலாஜி, சோனி லிவ் மற்றும் பல்வேறு இதர சேவைகளுடன் இணைந்து தரவுகளை வழங்குகிறது.

Vu-100-inch-4K-UHD-TV-frame

வு 100 100-இன்ச் ஆன்ட்ராய்டு 4K UHD எல்இடி டிவி சிறப்பம்சங்கள்:

– 100 இன்ச் 3480×2160 4K UHD A+ கிரேடு ஐ.பி.எஸ். பேனல்
– குவாட்-கோர் பிராசஸர்
– 2.5 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு 8.0
– டூயல் பேன்ட் வைபை, ப்ளூடூத், 3 x HDMI, 2 x USB, ஈத்தர்நெட் போர்ட்
– MPEG/H.264/H.265 டீகோடர்
– 12 + 12 + 12 வாட் பில்ட்-இன் ஜெ.பி.எல். சவுன்ட்பார், ஊஃபர், DTS ட்ரு சரவுன்டு, டால்பி டிஜிட்டல்
– வாய்ஸ் கன்ட்ரோல் ரிமோட், ஹாட்கீ

இந்தியாவில் புதிய வு 100 டிவி விலை ரூ.20,00,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வு அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கும் என்றும் விரைவில் மற்ற விற்பனையகங்களிலும் கிடைக்கச் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.