போஸ் சவுன்ட்ஸ்போர்ட் வயர்லெஸ் ஹெட்போன்கள்

ஆடியோ உபகரணங்களை உற்பத்தி செய்வதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் போஸ் சவுன்ட்ஸ்போர்ட் ஃப்ரீ என்ற பெயரில் புதிதாக இன்-இயர் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

அழகும், அற்புத அனுபவமும் வழங்கக்கூடிய வகையில் புதிய போஸ் ஹெட்போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடுமையான உடற்பயிற்சிக்காக உருவாக்கப்பட்டு இருப்பதால், ஜிம் செல்வோர் எவ்வளவு கடினமாக பயிற்சி செய்தாலும், ஹெட்போன்கள் காதில் இருந்து கீழே விழாது.

Bose-Soundsport-1

ஸ்டேஹியர் பிளஸ் எனும் போஸ் நிறுவனத்தின் சொந்த டிப்ஸ் கொண்டிருப்பதால், பல மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தினாலும், சவுகரிய அனுபவத்தை வழங்கும். ஐ.பி.எக்ஸ்4 தரச்சான்று பெற்று இருப்பதால் தண்ணீர் மற்றும் வியர்வை போன்றவற்றால் அதிகளவு பாதிப்பு ஏற்படாது.

மிகவும் சிறியதாக காட்சியளிக்கும் சார்ஜிங் கேஸ், ஹெட்போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் கேஸ் போன்றும் வேலை செய்கிறது. இயர்பட்கள் சார்ஜிங் கேஸ் இல் காந்த சக்தி மூலம் கச்சிதமாக பொருந்திக் கொள்வதால், இதனை சரியாக உள்ளே வைக்க வேண்டிய சிரமம் இருக்காது.

Bose-Soundsport

ஹெட்போன்களுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் இருமுறை ஹெட்போன்களை சார்ஜ் செய்து கொள்ள வழி செய்கிறது. ஒவ்வொரு இயர்பட் எடை 10 கிராமிற்கும் குறைவாக இருப்பதோடு, இதில் உள்ள புதிய ஆன்டெனா சிஸ்டம் இரு இயர்பட்கள் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களுடன் மிகச்சிறப்பாக இணைந்து கொள்ளும்.

புதிய போஸ் ஹெட்போன்கள் முழுமையாக சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் போஸ் சவுன்ட்ஸ்போர்ட் ஹெட்போன் விலை ரூ.18,990 முதல் துவங்குகிறது.