ஐந்து நிமிடங்களில் சுமார் இரண்டு லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை

ஒப்போவின் துணை பிரான்டு ரியல்மி தனது இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போனினை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது.

ரியல்மி 2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.8,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஃபிளாஷ் முறையில் இதன் முதல் விற்பனை இன்று (செப்டம்பர் 4) மதியம் 12.00 மணிக்கு துவங்கியது. ஐந்து நிமிடங்கள் நீடித்த விற்பனையில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரியல்மி 2 ஸ்மார்ட்போன்கள் விற்றதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Realme 2 First Sale

முதல் ஃபிளாஷ் விற்பனை இரண்டு நிமிடங்களில் நிறைவுற்ற நிலையில் அடுத்த விற்பனை செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

ரியல்மி 2 சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1520×720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– கலர் ஓஎஸ் 8.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி.
– 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இந்தியாவில் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் டைமன்ட் பிளாக், டைமன்ட் ரெட் மற்றும் டைமன்ட் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போன் 3 ஜிபி வேரியன்ட் விலை ரூ.8,990 என்றும் 4 ஜிபி ரேம் வேரியன்ட் விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 2 ஸ்மார்ட்போன் முதல் விற்பனையில் அசத்தல் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்த மாதமே அறிமுகம் செய்வதாக ரியல்மி அறிவித்துள்ளது.