ரூ.6,999 விலையில் ஹானர் 7எஸ் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ஹானர் பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்தில் சீன சந்தையில் வெளியிடப்பட்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1440 பிக்சல், ஃபுல் வியூ டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் MT6739 சிப்செட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, PDAF, எல்.இ.டி. ஃபிளாஷ், முன்பக்கம் 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹானர் 7எஸ் மாடலில் ஐ ப்ரோடெக்ஷன் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் தரவுகளை படிக்கும் போது டிஸ்ப்ளேவில் நீல நிற ஃபில்ட்டர் சேர்க்கப்படும், இது நீண்ட நேரம் திரையை பார்த்தாலும் கண்களை பாதிக்காது.

Hoor 7S Blue

ஹானர் 7எஸ் சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 TFT ஃபுல் வியூ டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
– பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF
– 5 எம்பி முன்பக்க கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– 4ஜி எல்.டிஇ, வைபை, ப்ளூடூத்
– ஃபேஸ் அன்லாக்
– 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இந்தியாவில் புதிய ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 7எஸ் மாடலின் முதல் ஃபிளாஷ் விற்பனை செப்டம்பர் 14-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு நடைபெறுகிறது. புதிய ஸ்மார்ட்போன் ஹானர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஹானர் 7எஸ் மாடல் பிளாக், புளு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.