ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி?

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் பீச்சர்போன் மாடலாக அறிமுகமாகி, தற்சமயம் இரண்டாவது தலைமுறை மாடலாக ஜியோபோன் 2 வெளியிடப்பட்டு விட்டது. முதல் தலைமுறை ஜியோபோன் அமோக வரவேற்பு பெற்ற நிலையில், ரிலையன்ஸ் ஜியோ சார்பில் இரண்டாம் தலைமுறை மாடல் ஜியோபோன் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், கைகளில் அடக்கமாகவும், எடை குறைவாகவும் இருக்கும் புதிய ஜியோபோன் மாடலில் க்வெர்டி கீபேட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஜியோபோன் 2 வெளிப்புற தோற்றம் பிளாக்பெரி போன்று காட்சியளஇக்கிறது. இதன் டிஸ்ப்ளே மற்றும் க்வெர்டி கீபேட் ஜியோபோன் 2 தோற்றத்தை அதிக அழகாக வெளிப்படுத்துகிறது.

ரிலையன்ஸ் ஜியோபோன் 2 கை ஓ.எஸ். மூலம் இயங்குகிறது. ஆன்ட்ராய்டு தளத்திற்கு அடுத்தப்படியாக அதிகம் பேர் பயன்படுத்தும் தளமாக கை ஓ.எஸ். இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஜியோபோன் கை ஓ.எஸ். மூலம் இயங்குகிறது. இந்தியாவில் ஜியோபோன் விலை ரூ.1500 என நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதால் மிகவும் விலை குறைந்த ஸ்மார்ட் பீச்சர் போன் என்ற பெருமையை பெற்றது.

Jiophone 2 Black

புதிய கை ஓ.எஸ். 2.5 பயனர்களுக்கு கூகுள் மேப்ஸ் போன்று பல்வேறு செயலிகளை பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. ஜியோபோன் கொண்டு பயனர்கள் ஜியோலொகேஷன், டைரெக்ஷன் மற்றும் பிளேசஸ் போன்ற மிகமுக்கிய ஆப்ஷன்களை பயன்படுத்தலாம்.

ஜியோபோன் 2 மாடலில் கூகுள் மேப்ஸ் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்பதால் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்த விரும்புவோர் தங்களுக்கு அருகாமையில் உள்ள ஜியோஸ்டோர் சென்று செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.

ஜியோபோன் 2 மாடலில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி?

முதலில் உங்களது ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் செயலியை ஜியோ ஸ்டோர் சென்று இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் உள்ளதை போன்றே ஜியோபோனிலும் கூகுள் மேப்ஸ் சீராக வேலை செய்யும். அருகாமையில் உள்ள உணவகங்கள் அல்லது மற்ற இடங்களுக்கான வழியை தேட என்ன செய்ய வேண்டும்?

1. ஜியோபோன் 2 மாடலில் ஜியோலொகேஷன் தானாக எனேபிள் செய்யப்பட்டு இருக்காது, இதனால் பயனர்கள் முதலில் செட்டிங்ஸ் — நெட்வொர்க் & கனெக்டிவிட்டி ஆப்ஷன் (Settings — Network & Connectivity) சென்று கீழே ஸ்கிரால் செய்யவும், இங்கு ஜியோலொகேஷன் (Geolocation) ஆப்ஷனை க்ளிக் செய்து ஆன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

2. இனி கூகுள் மேப்ஸ் செயலி சென்று லொகேஷனை இயக்குவதற்கான அனுமதியை செயலிக்கு வழங்க வேண்டும். பயனர் முந்தைய வழிமுறையை நிறைவு செய்ததும், இந்த அம்சம் வேலை செய்யும்.

ஒருவேளை முதல் வழிமுறை பின்பற்றப்படவில்லை எனில் செயலி பயனர் இருக்கும் இடத்தை காண்பிக்காது.