ட்விட்டரில் இரண்டு புதிய அம்சங்கள்

ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் புதிதாக இரண்டு அம்சங்கள் சோதனை செய்யப்படுகிறது. இரண்டு புதிய அம்சங்களும் பிரெசன்ஸ் (Presence) மற்றும் த்ரெடிங் (Threading) என அழைக்கப்படுகிறது.

இவற்றில் பிரெசன்ஸ்அம்சம் ட்விட்டரில் யார்யார் ஆன்லைனில் இருக்கின்றனர் என்பதை காண்பிக்கும், த்ரெடிங் அம்சம் மெசேஜிங் தளம் போன்று பதில் அளிக்க வழி செய்யும்.

புதிய அம்சங்களின் அறிவிப்பை ட்விட்டர் தளத்தின் தலைமை அதிகாரியான சாரா ஹைடர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இரு அம்சங்களும் பீட்டா மோடில் சோதனை செய்யப்பட்டு வருவதால், இதன் அதிகாரப்பூர்வ வெளியீடு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Twitter Presence Option

புதிய அப்டேட் மூலம் உரையாடல்கள் அனைத்தும் புளு மற்றும் பர்ப்பிள் நிறங்களுக்கு மாற்றப்படும். இதில் புளு நிறம் ட்வீட்களுக்கு பதில் அனுப்பும் போது ஏற்படும், பர்ப்பிள் நிறம் உண்மையில் ட்வீட் செய்தவரை குறிக்கும். எனினும் புதிய அம்சம் பயனர்களிடம் வித்தியாச பதில்களை பெற்றுவருகிறது.

அந்த வகையில் புதிய மாற்றங்களை விரும்பாதவர்களுக்கு என, பிரெசன்ஸ் அம்சத்தை ஆஃப் செய்யும் வசதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிலதினங்களுக்கு முன், ட்விட்டர் தளத்தில் இன்பாக்ஸ் போன்ற அம்சம் வழங்கப்பட்டது. இதில் பயனர்கள் பின்தொடர்வோரிடம் இருந்து வரும் தகவல்களை ஒருபக்கமாகவும், பின்பற்றாதவர்களிடம் இருந்து மற்றொரு பக்கமும் குறுந்தகவல்களை பார்க்க முடியும். எனினும் இதற்கு ‘Receive messages from anyone’ செட்டிங் செயல்படுத்தப்பட்டு இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.