5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட மோட்டோ பி30 நோட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மோட்டோ பி சீரிஸ் இன் கீழ் அறிமுகமாகி இருக்கும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மோட்டோ பி30 நோட் என அழைக்கப்படுகிறது.

பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் மோட்டோ பி30 நோட் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர், 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் ZUI 4.0, கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் டிசைன் கொண்டுள்ளது.

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ பி30 மாடலில் 18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Moto P30 Note

மோட்டோ பி30 நோட் சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 2.5 வளைந்த கிளாஸ் டிஸ்பளே
– 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக அதிகப்படுத்திக் கொள்ளும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ZUI 4.0
– 16 எம்பி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.25μm பிக்சல், OV16B சென்சார்
– 5 எம்பி இரண்டாவது கேமரா, f/2.2, OV5675 சென்சார்
– 12 எம்பி முன்பக்க கேமரா, f/2.0, 1.25μm பிக்சல்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 எம்.ஏஸ்ரீஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

புதிய மோட்டோ பி30 நோட் ஸ்மார்ட்போன் மெர்குரி பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் வேரியன்ட் விலை சீனாவில் 1999 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.20,710 என்றும், 6 ஜிபி ரேம் வேரியன்ட் விலை 2299 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.23,820 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் மோட்டோ பி30 விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், இதன் சர்வதேச மாடல் ஸ்டாக் ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.