ரூ.7,900 செலுத்தி கேல்கஸி நோட் 9 வாங்கலாம் – ஏர்டெல் அறிவிப்பு

சாம்சங் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் இந்தியாவிலும் துவங்கி விட்டது. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 9 ப்ரியர்களை கவரும் வகையில் ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி கேலக்ஸி நோட் 9 வாங்க விரும்புவோர் ரூ.7,900 செலுத்தி புத்தம் புதிய நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை பெறலாம்.
பின் மீதித் தொகையை மாதம் ரூ.2,999 என 24 மாதங்களுக்கு செலுத்தலாம். இதன் மூலம் இரண்டு ஆண்டுக்கான மொத்த தவணை மற்றும் ஏர்டெல் திட்டதிற்கான கட்டணம் ரூ.79,876 ஆகும்.

Samsung-Galaxy-Note-9-Airtel-offer

இதனுடன் மாத தவணை முறையுடன் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதன் பில்ட்-இன் திட்டத்தில் பயனர்களுக்கு மாதம் 100 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் டிவி மற்றும் வின்க் மியூசிக் சேவைகளுக்கு இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

தற்சமயம் பயனர்கள் தங்களுக்கான நோட் 9 ஸ்மார்ட்போனினை ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்வோருக்கு ரூ.4,999 விலையில் கியர்ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாம்சங் வலைதளத்தில் வழங்கப்படுகிறது. புதிய நோட் 9 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்டு 22-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படவிருக்கிறது.