ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 72-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு சலுகைகளின் விலை ரூ.9 மற்றும் ரூ.29 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை முறையே ஒரு நாள் மற்றும் ஏழு நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.

பி.எஸ்.என்.எல். ரூ.9 விலையில் வழங்கும் சலுகையில் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ரூ.29 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், பிரத்யேக ரிங்-பேக் டோன் உள்ளிட்டவை ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகைகளில் அன்லிமிட்டெட் அழைப்புகள் டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களுக்கு மட்டும் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர தேசிய ரோமிங் சேவை இரண்டு சலுகைகளுக்கும் பொருந்தும்.

ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் ரூ.47 விலையில் சலுகைகளை வழங்குகின்றன. ஏர்டெல் ரூ.47 சலுகையில் 125 நிமிடங்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், உள்ளூர், வெளியூர் மற்றும் தேசிய ரோமிங், 500 எம்பி டேட்டா, 50 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. வோடபோன் ரூ.47 சலுகையில் 125 நிமிடங்கள் அழைப்புகள், 50 எஸ்.எம்.எஸ். மற்றும் 500 எம்பி டேட்டா வழங்குகிறது.

சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.27 விலையில் சலுகையை அறிவித்தது. ஏழு நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இதன் வாய்ஸ் கால் அளவில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.