சாம்சங் கேலக்ஸி நோட் 9 அறிமுகமானது

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகமான சாம்சங் நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, பெசல்-லெஸ் ஸ்கிரீன் போனின் பக்கவாட்டு வரை நீள்கிறது, நோட் 8 போன்றே காட்சியளிக்கிறது. 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.5, f/2.4 அப்ரேச்சர், 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய நோட் 8 போன்றே ஐரிஸ் சென்சார், கைரேகை சென்சார் இம்முறை கேமராவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, பிக்ஸ்பி அசிஸ்டண்ட் சேவை மற்றும் இதனை இயக்க பிரத்யேக ஹார்டுவேர் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

Samsung-Galaxy-Note9

இத்துடன் மேம்படுத்தப்பட்ட எஸ் பென் ஸ்டைலஸ் ப்ளூடூத் வசதி மற்றும் பட்டன் கொண்டுள்ளது. இதை கொண்டு செல்ஃபி மற்றும் வழக்கமான புகைப்படத்தை எடுக்க முடியும். கேமராவை ஆன் செய்து ஸ்டைலஸ்-இல் உள்ள பட்டனை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது. மேலும் இந்த பட்டன் கொண்டு வீடியோவை பிளே, பாஸ் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்க முடியும்.

நோட் 9 ஸ்மார்ட்போனில் AKG டியூன் செய்த ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சவுன்டு சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள ஏ.ஆர். எமோஜி மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் முகத்தில் உள்ள 100-க்கும் அதிக முக நுனுக்கங்களை கண்டறிந்து 3D மாடல் ஒன்றை உருவாக்கி உங்களது முகபாவனைகளை உருவாக்குகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோட் 9 மாடலில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

Samsung-Galaxy-Note9-1

சாம்சங் கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU
– ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர், மாலி G72MP18 GPU
– 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ)
– சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5, எல்.இ.டி. ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
– 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, f/1.7
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
– BLE எஸ் பென்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர் மற்றும் வயர்லெஸ்

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், லாவென்டர் பர்ப்பிள், மெட்டாலிக் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த நிறங்களுக்கு ஏற்ற நிறத்தில் எஸ் பென், ஓசன் புளு ம்ற்றும் எல்லோ எஸ் பென் வழங்கப்படுகிறது.

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி வெர்ஷன் விலை 999.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.68,750) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி ரேம் மாடல் 1249.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.85,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி நோட் 9 விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்குகிறது.