ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கும் ப்ளிப்கார்ட் பிக் ஃப்ரீடம் சேல்

ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் ஃப்ரீடம் சேல் சிறப்பு விற்பனை துவங்கியது. இன்று (ஆகஸ்டு 10) துவங்கிய சிறப்பு விற்பனை ஆகஸ்டு 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் மற்றும் மின்சாதனங்களுக்கு எக்சேன்ஜ் சலுகைகள், வட்டியில்லா மாத தவனை முறை வசதி மற்றும் பைபேக் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனின் 32ஜிபி மாடல் விலை ரூ.10,999-இல் இருந்து ரூ.3,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 10 (6 ஜிபி) வெர்ஷன் விலையில் ரூ.6,000 குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர்கள் இதனை ரூ.29,999 விலையில் வாங்கிட முடியும். மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக உடனடி தள்ளுபடியாக அதிகபட்சம் ரூ.17,950 வழங்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் 64 ஜிபி மாடல் ரூ.49,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ.61,000 என்ற வகையில், பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து அதிகபட்சம் ரூ.15,950 வரை விலையை குறைக்க முடியும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.8,000 வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

எல்ஜி ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போன் முதல்முறையாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிலையில், தள்ளுபடி எதுவும் வழங்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகமானதால், புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்வோருக்கு ரூ.15,950 வரை உடனடி தள்ளுபடி, ஸ்மார்ட்போனின் விலையில் கூடுதலாக ரூ.199 செலுத்தும் போது ரூ.30,000 வரை பைபேக் உத்தரவாதம் பெற முடியும். இவ்வாறு எட்டு மாதங்களில் எல்ஜி ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போனை வழங்கும் போது ரூ.30,000 வரை வழங்கப்படும்.

ஆப்பிள் ஐபேட் (6-ம் தலைமுறை) 32 ஜிபி மற்றும் வைபை மாடல் விலை ரூ.4,100 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.23,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (42 எம்.எம்.) விலை ரூ.6,510 குறைக்கப்பட்டு ரூ.27,900 விலையில் விற்பனையாகிறது.

பிரபல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தவிர, டேப்லெட், மொபைல் சாதனங்கள் மற்றும் பல்வேறு இதர மின்சாதனங்களுக்கும் இதேபோன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் பல்வேறு இதர பொருட்களுக்கும் ப்ளிப்கார்ட் தளத்தில் சலுகைகள் வழங்கப்படுகின்றன.