இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ (2018) அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10.5 இன்ச் WUXGA டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய டேப்லெட் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

டால்பி அட்மாஸ் சவுன்ட் சிஸ்டம், 4ஜி எல்.டி.இ. வசதி கொண்டிருக்கும் புதிய டேப்லெட் 7300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Galaxy Tab A 2018

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ (2018) சிறப்பம்சங்கள்

– 10.5 இன்ச் 1920×1200 பிக்சல் WUXGA 16:10 ரக TFT எல்.சி.டி. டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– 4 ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
– 4ஜி எல்டிஇ, வைபை, வைபை டைரக்ட், ப்ளூடூத், யுஎஸ்பி 2.0 டைப்-சி
– 7,300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ (2018) எபோனி பிளாக் மற்றும் அர்பன் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் சாம்சங் ஆன்லைன் தளம் மற்றும் ப்ளிப்கார்ட்-இல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைன் விற்பனையகங்களிலும் கேலக்ஸி டேப் ஏ (2018) விற்பனை செய்யப்படுகிறது.

புதிய கேலக்ஸி டேப் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.2750 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனை பெற பயனர்கள் ரூ.198 அல்லது ரூ.299 சலுகைகளை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இத்துடன் அடுத்த நான்கு ரீசார்ஜ்களுக்கு டபுள் டேட்டா சலுகைகளும் வழங்கப்படுகின்றன.