அமேசான் சிறப்பு விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அதிகப்படியான சலுகைகள்

அமேசான் வலைதளத்தில் ஃப்ரீடம் விற்பனை துவங்கியது. இன்று (ஆகஸ்டு 9-ம் தேதி) துவங்கிய சிறப்பு விற்பனை ஆகஸ்டு 12-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறன்றன.

பல்வேறு நிறுவன ஸ்மார்ட்போன்கள், நுகர்வோர் மின்சாதனங்கள், தொலைகாட்சி மற்றும் இதர பிரிவுகளில் சுமார் 17 கோடி பொருட்களுக்கு 20,000-க்கும் அதிகமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்துடன் ஒன்பிளஸ், ஹூவாய், ஹானர், சாம்சங், விவோ, ரியல்மி, ஜெ.பி.எல்., சோனி மற்றும் பல்வேறு பிரான்டுகளின் சாதனங்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் எக்கோ சாதனங்கள், ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் கின்டிள் இ-ரீடர் போன்றவைகளுக்கு நான்கு நாட்களுக்கும் சிறப்பு விலை அறிவிக்கப்பட்டுள்ளன. இத்துடன் மொபைல் போன், உபகரணங்களுக்கு 40% மற்றும் நுகர்வோர் மின்சாதனங்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள்:

– ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.59,999 (ரூ.5000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)

– நோக்கியா 6.1 (4 ஜிபி) ரூ.15,999 (ரூ.2000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)

– ஹூவாய் P20 லைட் – ரூ.16,999 (ரூ.3000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)

– ஒன்பிளஸ் 6 – எக்சேன்ஜ் செய்து ரூ.2000 கூடுதல் தள்ளுபடி, 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி

– ரியல்மி 1 – எக்சேன்ஜ் முறையில் ரூ.1000 கூடுதல் தள்ளுபடி, 6 மாதங்களுக்கு வட்டில்லா மாத தவனை முறை

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10,700 வரை தள்ளுபடி, எக்சேன்ஜ் முறையில் ரூ.10,000 வரை கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை முறை வசதி சலுகைகள்.

விவோ ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து ரூ.6000 கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை முறையில் ரூ.6000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதேபோன்று மோட்டோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.5700 வரை தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை, வட்டியில்லா மாத தவனை முறை வசதியும், ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேன்ஜ் முறையில் ரூ.8,000 வரை கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.