அரசு சேவைகளை மொபைலில் இணைக்க புதிய செயலிகள் அறிமுகம்

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தனது டி.என்.டி. 2.0 (DND 2.0) மற்றும் மைகால் (MyCall) செயலிகளை மத்திய அரசின் இ-சேவை தளமான உமாங் (UMANG) உடன் இணைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் பல்வேறு அரசு சேவைகளை மிக எளிமையாக இயக்க முடியும்.

புதிய தலைமுறை அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த மொபைல் செயலியாக உமாங் உருவாக்கப்பட்டது. இந்த செயலி மத்திய அரசின் மின்னணு மற்றும்ம தகவல் தொழில்நுட்ப துறையி் நேரடி கட்டுப்பாட்டில் உருவாக்கப்பட்டது.

“உமாங் செயலி அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஒற்றை ஆன்ட்ராய்டு தளத்தின் கீழ் அரசின் இ-சேவைகளை, மத்திய அரசு முதல் உள்ளூர் பஞ்சாயத்துக்கள் மற்றும் இதர குடிமக்கள் சார்ந்த சேவைகளை வழங்குகிறது,” என டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRAI Logo Violet

ஒருங்கிணைந்த திட்டத்தால் மக்கள் ஒரே செயலியை இன்ஸ்டால் செய்து அரசின் பல்வேறு சேவைகளை தங்களது மொபைலில் பெற முடியும் என உமாங் தெரிவித்துள்ளது. தற்சமயம் உமாங் செயலியை சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர். இதுதவிர டிராயின் மற்ற செயலிகளை தனித்தனியே நான்கு லட்சத்திற்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளன.

டிராயின் மைகால் செயலி பயனர்கள் தங்களது வாய்ஸ் கால் தரத்தை மதிப்பீடு செய்ய வழங்கப்படுகிறது, இதன் மூலம் டிராய் பயனர் அனுபவம் சார்ந்த தகவல்களை பெற முடிகிறது. டி.என்.டி. செயலி ஸ்மார்ட்போன் பயன்படுத்துவரை தங்களது நம்பரை பதிவு செய்து தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை முடக்க வழி செய்கிறது.