ஆகஸ்டு 21-இல் இந்தியா வரும் புதிய நோக்கியா போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஆகஸ்டு 21-ம் தேதி இந்தியாவில் புதிய சாதனத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் நோக்கியா 6.1 பிளஸ் (நோக்கியா எக்ஸ்6) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தைகளில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Nokia-HMD-invite

நோக்கியா 6.1 பிளஸ் சிறப்பம்சங்கள்

– 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஆன்ட்ராய்டு பி அப்டேட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல், EIS
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3060 எம்ஏஹெச் பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

சர்வதேச சந்தையில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் விலை 290 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,110) என நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் இதன் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு, ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே நிகழ்வில் நோக்கியா 5.1 மற்றும் மேம்படுத்தப்பட்ட நோக்கியா 8110 4ஜி மொபைல் போனும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.