இந்தியாவில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹானர் பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. ஹானர் பிளே என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் கேமிங் செய்ய சிறப்பானதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் பிளே மாடலில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, கிரின் 970 பிராசஸர், சிறப்பான டர்போ கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளதால், மொபைலின் கேமிங் தலைசிறந்ததாக இருக்கும். இதனால் மொபைல் கேம் விளையாடும் போது ஹேங் ஆவது, சீக்கிரம் சூடாவது போன்ற பிரச்சனைகள் எழாது, எழக்கூடாது எனலாம்.

கேமிங்கை தொடர்ந்து அழகிய புகைப்படங்கள் எடுக்க வசதியாக ஹானர் பிளே ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது 20 எம்பி டூயல் பிரைமரி கேமரா சென்சாருடன் இணைந்து போர்டிரெயிட் படங்களையும் மிகத் தெளிவாக எடுக்கும். போனுக்கு சக்தியூட்டும் விதமாக 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் சார்ஜ் செய்யக்கூட நேரமில்லாதவர்களுக்காக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும், 4D கேமிங் அனுபவத்தில் கிராஃபிக்ஸ் மட்டுமின்றி 3D ஆடியோ எஃபெக்ட்களும் வழங்கப்படுகிறது. இத்துடன் கேம் சூழலுக்கு ஏற்ப ஏ.ஐ. வைப்ரேஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

Honor-Play

ஹானர் பிளே சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்சிடி 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர்
– மாலி-G72 MP12 GPU
– i7 கோ-பிராசஸர், NPU, GPU டர்போ
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8. ஓரியோ மற்றும் EMUI 8.2
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, CAF, EIS
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5mm ஆடியோ ஜாக், 7.1-சேனல் ஹிஸ்டன் ஆடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3750 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் ஹானர் பிளே ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் நேவி புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் மாடல் ரூ.19,999 என்றும் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.23,999 என நிர்ணயம் செயய்ப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ஹானர் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.