ஃபேஸ்புக் டேட்டிங் சேவை துவக்கம்?

ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகளுடன் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சார்ந்த அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. தற்சமயம் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுப்படையான வெளியீட்டுக்கு முன் ஃபேஸ்புக் பணியாளர்கள் மத்தியில் டேட்டிங் சேவை முதற்கட்டமாக சோதனை செய்யப்படுவதாக ஆப் ஆய்வாளர் ஜேன் மேன்சுன் வாங் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரம் சேவையின் சோர்ஸ் கோடுகளில் இடம்பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

டேட்டிங் ப்ரோஃபைல்களில் போலி தகவல்களை பதிவு செய்ய ஃபேஸ்புக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அனைத்து தகவல்களும் பொது வெளியீட்டுக்கு முன் அழிக்கப்பட்டு விடும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FB Dating Test

இத்துடன் புதிய சேவை சோதனை செய்யப்பட்டாலும் துன்புறுத்தலுக்கு எதிரான விதிமுறைகள் இந்த சேவைக்கு பொருந்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய சேவையின் சைன்-அப் பக்கத்தில் பாலினம், இருப்பிடம் மற்றும் நீங்கள் விரும்பும் பாலினம் சார்ந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். வொங் சைன்-அப் விவரங்களை பதிவு செய்திருந்தாலும், அவரது ப்ரோஃபைல் உருவாக்க முடியவில்லை. சோதனை வெற்றிகரமாக நிறைவுற்றதும், வெளியிடப்படும் என்றும், பிடிக்காத பட்சத்தில் இந்த சேவை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் என ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது.

ஃபேஸ்புக் டேட்டிங் சேவையில் பயனர்கள் தங்களது ஃபேஸ்புக் ப்ரோஃபைலில் இருந்து வித்தியாசமான டேட்டிங் ப்ரோஃபைலை உருவாக்க முடியும். பயனர் தேர்வு செய்யும் விருப்பத்திற்க்கு ஏற்ப ப்ரோஃபைல்களை வரிசைப்படுத்தும். இவ்வாறு பொதுவாக இருக்கும் விவரங்கள், மியூச்சுவல் நண்பர்களின் ப்ரோஃபைல்கள் இடம்பெறும் நிலையில், க்ரூப் மற்றும் ஈவன்ட்களில் இருந்தும் ப்ரோஃபைல்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது.