வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் பி.ஐ.பி மோட்

வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஒருவழியாக சோதனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வழங்கப்பட்ட பிக்சர் இன் பிக்சர் மோட் ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட் 2.18.234 வெர்ஷனில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

பிக்சர் இன் பிக்சர் மோட் வசதியுடன் யூடியூப் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியிலேயே பார்த்து ரசிக்க முடியும். யூடியூப் வீடியோக்களின் அளவை மாற்றிக் கொள்ளும் மிதக்கும் விண்டோ மூலம் வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீனில் இருந்து கொண்டே பார்க்க முடியும்.

வாட்ஸ்அப்பில் எவரேனும் யூடியூப் லின்க் அனுப்பும் போது, அந்த வீடியோவை வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமல் பார்க்க முடியும். வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் பிக்சர் இன் பிக்சர் மோட் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளுக்கு வேலை செய்கிறது.

இதேபோன்று பி.ஐ.பி. மோட் இன்ஸ்டாகிராம் வீடியோக்களையும் வாட்ஸ்அப் சப்போர்ட் செய்கிறது, எனினும் இது இன்ஸ்டாகிராம் வீடியோக்களுக்கு பொருந்தாது. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று இந்த அம்சம் இதுவரை சோதனையில் இருப்பதால் பயனர்கள் இதனை பயன்படுத்த முடியாது.

எனினும் அடுத்து வரயிருக்கும் அப்டேட்களில் இந்த அம்சம் வழங்கப்படலாம். அவ்வாறு வழங்கப்படும் நிலையில், பிரீவியூ தம்ப்நெயில் ஒன்றை பார்க்க முடியும்.