இந்தியாவில் சாம்சங் கியர் ஐகான் எக்ஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கியர் ஐகான் எக்ஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம்பியன்ட் சவுன்ட் அம்சம் மற்றும் டிராக்கிங் வசதி கொண்டிருக்கும் கியர் ஐகான் எக்ஸ் 4ஜிபி மெமரி கொண்டிருப்பதால் பயனர் விரும்பும் இசையை மொபைல் போனுடன் இணைக்காமலேயே பயன்படுத்த முடியும்.

இதுதவிர மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள மியூசிக் ஃபைல்களை வயர்லெஸ் முறையிலோ அல்லது யு.எஸ்.பி. கேபிள் மூலமாகவோ இயர்பட்ஸ்-க்கு ஏற்றிக் கொள்ளலாம். இதன் பின் டச் வசதி கொண்ட் ஜெஸ்ட்யூர் மூலம் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

இதன் ஈக்வலைசர் அம்சம் கொண்டு ஆடியோ ஃப்ரீக்வன்சி அளவுகளை: பாஸ் பூஸ்ட், சாஃப்ட், டைனமிக், க்ளியர் மற்றும் டிரெபிள் பூஸ் என ஐந்து வித ஆப்ஷன்களில் இருந்து தேர்வு செய்யலாம். இதனால் பயனர் விரும்பும் ஆம்பியன்ட் அனுபவத்தை பெற முடியும்.

இசையை கேட்பது மட்டுமின்றி ஐகான் எக்ஸ் கொண்டு அழைப்புகளை ஸ்டீரிபோன் தரத்தில் அனுபவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இன்கமிங் அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. இதனுடன் சாம்சங்கின் ஸ்மார்ட் அசிஸ்டண்ட் பிக்ஸ்பி சேவையும் இந்த கியர் ஐகான் எக்ஸ் சப்போர்ட் செய்கிறது.

இயர்பட்-ஐ சற்று அழுத்திப்பிடித்தால் வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் இசையை இயக்கவோ, அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள செய்ய முடியும். இதனால் கைகளின் உதவியின்றி இயர்பட்ஸ்-ஐ முழுமையாக இயக்கலாம். கியர் ஐகான் எக்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருப்பதோடு ஐந்து மணி நேர மியூசிக் ஸ்ட்ரீமிங் வசதியும், ஏழு மணி நேரத்திற்கு மியூசிக் பிளேபேக் வரை பேக்கப் ழழங்குகிறது.

கியர் எஸ் ஃப்ரான்டியர் அல்லது கியர் ஃபிட் 2 ப்ரோ போன்ற சாதனங்களுடன் இணைக்க முடியும் என்றாலும், இயர்பட்ஸ்-இல் டிராக்கிங் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இது நீங்கள் நடந்த அல்லது ஓடிய தூரம், அதற்கான நேரம் மற்றும் உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள் உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது.

இந்தியாவில் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் சாம்சங் கியர் ஐகான் எக்ஸ் விலை ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி மின்சாதன வர்த்தகர்கள் மற்றும் ப்ளிப்கார்ட், சாம்சங் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.