பட்ஜெட் விலையில் லாவா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

லாவா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் மாதத்தில் லாவாவின் இசட்50 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்சமயம் லாவா இசட்61 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

புதிய லாவா இசட்61 ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஃபுல் வியூ ஃபுல்-லேமினேஷன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 எம்பி ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, ஸ்கிரீன் மற்றும் எல்இடி ஃபிளாஷ் மற்றும் பொக்கே மோட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இதன் ஹோம் ஸ்கிரீனில் வழங்கப்பட்டு இருக்கும் லாங்குவேஜ் ஷார்ட்கட் அதிகளவு செட்டிங்களை கடந்து சாதனத்தின் மொழியை மாற்ற வேண்டிய தொல்லையை போக்குகிறது. இந்த ஷார்ட்கட் கொண்டு ஹோம் ஸ்கிரீனில் சில க்ளிக்-களை செய்து மொழியை மாற்றிக் கொள்ளலாம். இத்துடன் எஸ்.எம்.எஸ்.-களையும் நீங்கள் விரும்பும் அல்லது உங்களுக்கு தெரிந்த மொழியில் வாசிக்கும் வதியை லாவா சேர்த்திருக்கிறது.

Lava Z61

லாவா இசட்61 சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
– 1 ஜிபி / 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ கோ எடிஷன் / ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஹெச். பேட்டரி

லாவா இசட்61 ஆன்ட்ராய்டு ஓரியோ கோ எடிஷன் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் லாவா இசட்61 விலை ரூ.5,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லாவா இசட்61 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ எடிஷன் ஆகஸ்டு மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அறிமுக சலுகை:

– செப்டம்பர் 30, 2018-க்குள் லாவா இசட்61 ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ஒரு முறைஸ் கிரீனினை சரி செய்யும் வசதி இலவசமாக வழங்கப்படுகிறது.

– ஜியோ பயனர்களுக்கு ரூ.2,200 வரையிலான உடனடி கேஷ்பேக் ரூ.50 மதிப்புடைய வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இதை பெற பயனர்கள் ரூ.198 அல்லது ரூ.299 விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.