பழைய விலையில் இருமடங்கு டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199 சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பழைய சலுகையில் பயனர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.199 சலுகையில் தினமும் அதிகபட்சம் 2.8 ஜிபி வரை 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 78.4 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

அன்லிமிட்டெட் அழைப்புகளின் படி பயனர்கள் தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்களும் பேச முடியும். புதிய மாற்றத்தின் படி வோடபோன் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணத்தை ரூ.2.54 விலையில் வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.198 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.