இன்ஸ்டாவில் புதிதாய் இணையும் இரண்டு அம்சங்கள்

புகைப்படம் மற்றும் சிறிய வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் பிரபல சமூக வலைத்தளமாக இன்ஸடாகிராம் இருக்கிறது. ஃபேஸ்புக் வைத்திருக்கும் இந்த செயலியில் அதிகளவு புதுப்புது அம்சங்கள் சமீப காலங்களில் சேர்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக இரண்டு அம்சம்ங்களை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய இரண்டடுக்கு ஆத்தென்டிகேஷன் (Two-Step Authentication) மற்றும் பொது அக்கவுன்ட்கள் அவர்களின் ஃபாளோவர்களை நீக்கும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.

Insta Follower Remove

இன்ஸ்டா அக்கவுன்ட் ஃபாளோவர்களை நீக்கும் அம்சம் நீண்ட காலமாக பிரைவேட் அக்கவுன்ட் வைத்திருப்போருக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில், பப்ளிக் அக்கவுன்ட் பயன்படுத்துவோருக்கு இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதால், ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு படிப்படியாகவே வழங்கப்படும்.

புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து விட்டு, புதிய அம்சங்களின் முழுமையான வெளியீடு குறித்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை. இவ்வாறு ஃபாளோவர்களை நீக்கும் போது அவர்களுக்கு எவ்வித நோட்டிஃபிகேஷனும் அனுப்பப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் உங்களின் ஃபாளோவர்களை நீங்கள் நீக்குவது அவர்களுக்கு இன்ஸ்டாகிராம் சார்பில் தெரிவிக்கப்படாது. எனினும் அவர்களாக உங்களது அக்கவுன்ட்-ஐ தேடும் பட்சத்தில் புதிதாய் ஃபாளோ பட்டன் தெரியும் பட்சத்தில் குறிப்பிட்ட நபர் ஏதோ பிழை ஏற்பட்டு இருப்பதை தெரிந்து கொள்ள முடியும்.

Insta Mute Profile

முன்னதாக மே மாதத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் மியூட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு ஒருவரை பின்தொடரும் போது அவர்களது போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்களை முழுமையாக தவிர்க்க முடியும். புதிய அம்சம் மூலம் இன்ஸ்டாகிராமில் உங்களை பின்தொடர்வோரை முழுமையாக இயக்கும் வசதி கிடைக்கப்பெறும்.

இந்த அம்சம் உங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதை தெரிந்து கொள்ள, உங்களது ஃபாளோவர்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி செங்குத்தாக இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்தால், குறிப்பிட்ட நபரை நீக்குவதற்கான அம்சம் இடம்பெற்றிருக்கும்.