யுஎஸ்பி டிரைவ் பயன்படுத்த பயன்தரும் தந்திரங்கள்

21-ம் நூற்றாண்டில் நம் வாழ்க்கையில் ஒன்றாக கலந்து விட்ட சாதனங்களாக கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்கள் மாறிவிட்டன.

தகவல் பரிமாற்றம் செய்யும் ஒற்றை பயன் கொண்டிருந்த முதல் தலைமுறை கம்ப்யூட்டர் மற்றும் தொலைபேசிகள் இன்று நாம் கனவிலும் கண்டிறாத எக்கச்சக்க வசதிகளை வழங்கி, நம் வாழ்க்கையை அடியோடு மாற்றி இருக்கின்றன.

அந்த வகையில் புறா மூலம் தூது அனுப்பிய காலம் மாறி, இன்று புறா லோகோ கொண்ட டிஜிட்டல் தளங்களில் நாம் தகவல்களை தரவுகளை பரிமாற்றம் செய்ய துவங்கிவிட்டோம். இவ்வாறு டிஜிட்டல் தரவுகளை பரிமாற்றம் செய்ய உதவும் சிறிய சாதனமாக யுஎஸ்பி டிரைவ்கள் இருக்கின்றன.

தகவல் பரிமாற்றத்தை கடந்து நாம் நினைப்பதை விட பல்வேறு இதர பயன்களை யுஎஸ்பி டிரைவ்கள் வழங்குகின்றன. அவ்வாறு யுஎஸ்பி டிரைவ் மூலம் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

தகவல் சேமிப்பான்

இண்டர்நெட் மற்றும் பல்வேறு வழிகளில் நம் கணினியில் உள்ள தரவுகள் அவ்வப்போது கரப்ட் எனப்படும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படலாம். இதனால் டிஜிட்டல் தரவுகளை பிளாஷ் டிரைவ் மூலம் சேமித்து வைப்பது எளிமையாகவும், பாதுகாப்பான வழிமுறையாகும்.

கம்ப்யூட்டர் பூட்டு

யுஎஸ்பி டிரைவினை கொண்டு கம்ப்யூட்டரை லாக் மற்றும் அன்லாக் செய்ய முடியும். வேறு யாரேனும் உங்களது கம்ப்யூட்டரை பயன்படுத்த முயற்சி செய்தால், கணினி தேவையான அனுமதியை வழங்காமல் உங்களது தரவுகளை பாதுகாக்கும்.

என்க்ரிப்ட் செய்யும்

உங்களது மிக முக்கிய தரவுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க அவற்றை என்க்ரிப்ட் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது மற்றவர்கள் உங்களது கம்ப்யூட்டரை இயக்க முடியாது. இதை செயல்படுத்த விண்டோஸ் மற்றும் பல்வேறு இயங்குதளங்களுக்கு ஏற்ற செயலிகள் அவற்றுக்கான வலைதளங்களில் கிடைக்கின்றன.

டிஸ்க் பார்டிஷன்

பிளாஷ் டிரைவில் பார்டெட் மேஜிக் (Parted Magic) இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டர் பார்டிஷன் செய்ய யு.எஸ்.பி. டிரைவ்களை பயன்படுத்தலாம். இவற்றை கொண்டு மிக எளிமையாக கம்ப்யூட்டர் ஹார்டு டிரைவ் பார்டிஷன் செய்ய முடியும்.

ஆண்டிவைரஸ்

வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை ஆண்டிரவைஸ் மூலம் சரி செய்யலாம் என தெரியும், ஆனால் ஆண்டிவைரஸ் மென்பொருளை யுஎஸ்பி மூலம் இயக்க முடியும் என தெரியுமா. பெரும்பாலான ஆண்டிவைரஸ் மென்பொருள்களை சிடி அல்லது யுஎஸ்பி மூலம் தகவல்களை மீட்க வழி செய்கின்றன. அந்த வகையில் மென்பொருளை யு.எஸ்.பி. டிரைவில் ஏற்றி கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ்களை களைய முடியும்.

ஸ்மார்ட்போன் கூடுதல் மெமரி

குறைந்த மெமரி கொண்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பயன்படுத்துவோர் தங்களது தரவுகளை யுஎஸ்பி டிரைவில் வைத்துக் கொள்ளலாம், இதை எளிமையக்க யுஎஸ்பி ஓடிஜி டிரைவ்கள் கிடைக்கின்றன. இதை கொண்டு எவ்வித மென்பொருள் உதவியும் இன்றி எக்ஸ்டெர்னல் டிரைவ் போன்று யுஎஸ்பியை பயன்படுத்தலாம்.